Monday, January 11, 2010

Garbarakshambikai temple, Thirukarukavur

ஸ்ரீகர்ப்பரக்ஷாம்பிகை கோவில், திருக்கருக்காவூர்.
குழந்தை இல்லாதவர்கள் அம்பாளை வேண்டி கொண்டு பிரசாதம் சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் அம்பாளை வேண்டிக்கொண்டால் நல்ல படியாக சுகப்பிரசவம் ஏற்படும். இந்த ஊரில் குழந்தை கரு களைந்தவர் என்று புராண காலத்திலிருந்து இன்று வரை யாரும் இல்லை என்பது அதிசயமே!
வேதிகை என்ற கருவுற்றிருந்த பெண் கணவர் இல்லாமல் தனித்திருந்த சமயம் கர்ப்பாவஸ்தையால் சுயநினைவிழந்து மயக்கமுற்றிருந்த பொழுது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்க, மயக்கமுற்றிருந்த படியால் வேதிகையால் முனிவருக்கு பிச்சை இட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு களைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் கர்ப்பரக்ஷகியாக தோன்றி களைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்துக் காப்பாற்றி நைந்துருவன் என்று குழந்தையாக கொடுத்தாள். இறைவியின் அருள் மகிமையை கண்டுணர்ந்த வேதிகை இனி இத்தலத்தில் கர்ப்பரக்ஷாம்பிகையாக தோன்றி, உலகில் கரு தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டும் என பிரார்த்திக்க, அம்பாள் அவ்வாறே அருள்பாளித்தால். அது முதற்கொண்டு அம்பாளுக்கு கர்ப்பரக்ஷாம்பிகை என்று பெயர் வழங்கி வரலாயிற்று.
முருகேசன், கோயம்புத்தூர்.
எனக்கு நண்பர்களில் உதவியால் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை கோவிலை பற்றி தெரியும். எனக்கு திருமணமாகி ஆறு வருடங்களுக்கு பிறகு எனது மனைவி கர்ப்பம் தரித்தார். இதனால் நல்ல படியாக குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக இந்த கோவிலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரசாதம் வாங்கி பயன்படுத்தி வந்தோம். இறைவன் அருளால் நல்ல படியாக சுகப் பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு நாங்கள் மூன்று மாதம் கழித்து கோவிலுக்கு சென்று குழந்தையை தங்க தொட்டிலில் வைத்து பரிஹாரங்கள் செய்து வந்தோம். எனது குழந்தையும், மனைவியும் ஸ்ரீ கர்ப்பர்க்ஷாம்பிகை அருளால் சுகமாக உள்ளனர் என்பது எனது முழு நம்பிக்கை. கடவுள் உள்ளார் என்பதற்கு இது போன்ற செயல்களே ஆதாரம். திருச்சியில் ஜெயம்கண்ணன் என்ற மருத்துவர் கூட குழந்தை பிரச்சனைக்கு வருபவர்களிடம் இந்த கோவிலுக்கு சென்று வர அறிவுறுத்துகிறார்.

குழந்தை பாக்கியம் பெற நெய் மந்திரித்தல்
மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாவதற்கு, அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்து அனுப்பப்படும் நெய் பிரசாதத்துடன் அரை கிலோ சுத்தமான நெய் கலந்து வைத்துக்கொண்டு இரவு படுக்கைக்கு செல்லும் போதுசிறிதளவு எடுத்து தம்பதியினர் அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகை அம்பாளை வணங்கி தொடர்ந்து நாற்பதெட்டு நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் பத்தியங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லை.இதர மருந்து சாப்பிடுபவர்கள் அதனையும் சாப்பிடலாம்.பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஐந்து நாட்கள் சாப்பிடக்கூடாது.இவ்வாறு செய்தால் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை அருளால் மகப்பேறு உண்டாகும்.
சுகப் பிரசவம் அடைய விளக்கெண்ணெய் மந்திரித்தல்
கர்ப்பிணி பெண்கள் சுகப் பிரசவம் அடைவதற்காக இத்திருக்கோவிலில் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை திருப்பாதத்தில் வைத்து விளக்கெண்ணை மந்திரித்து கொடுக்கப்படுகிறது.இது விஷேசமானதாகும். விளக்கெண்ணை ஐந்து அல்லது ஏழு மாதத்திலிருந்து தொடர்ந்து அடி வயிற்றில் தேய்த்து வர சுகப் பிரசவம் ஏற்படும்.



No comments:

Post a Comment