Friday, March 12, 2010

முந்தி விநாயகர், கோவை

திருமணத்தை நடத்தி வைக்கும் கோவை பிள்ளையார்

இவர் வலப்புறம் சுழித்த தும்பிக்கையுடன் வலம்புரி விநாயகராக திகழ்கிறார். வலம்புரி என்பது அவரின் தந்தையான சிவனின் அம்சமாகும். திருமணம் தடைபட்டவர்கள் வேண்டினால் திருமண தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும்,திருமணமானமாகியும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லையே என்று ஏங்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளிக்கிறார், வேலை இல்லாதவர்களுக்கு தன கோரிக்கையினை வைத்தால் வேலை பெற்றுத்தரவும் செய்கிறார். இவ்வளவு சக்தி வாய்ந்த பிள்ளையாரை நாமும் நம் வாழ்நாளிள் ஒரு முறை சென்று வணங்கி வருவோம்.
கோவை நகரில் உள்ள புலியகுலத்தில் ரோட்டின் மையப்பகுதியில் முந்தி விநாயகராக அருள்கிறார். இந்த விநாயகரின் உயரம் பத்தொன்பது அடி பத்து அங்குலம், மனிதனை போன்று ஏறக்குறைய நான்கு மடங்கு உயரமானவர். அகலம் பதினோரு அடி கொண்டவர். எடை நுற்றிதொன்னுறு டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ )
முந்தி விநாயகரை வணங்கி நாமும் பலனடைவோம்

No comments:

Post a Comment